ஹிஜ்ரத் புரம் கிராம இளைஞர்களை ஒன்றினைந்து நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் ரத்மல்யாய பிரதேசத்தின் ஹிஜ்ரத் புரம் கிராம இளைஞர்களை ஒன்றினைந்து நடாத்தப்பட்ட மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் சனிக்கழமை (25) இடம்பெற்றது.
இதற்கான பிரதான அனுசரணையை ஏ.டூ.இஸட் ஒன்லைன் கேன்ஸர் மற்றும் மொஸ்கோ டெய்லர், ஏ.இஸட் கிளாஸ் ஹவுஸ் ஆகிய நிறுவனங்கள் வழங்கி இருந்தன.
போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், கிராம மக்களின் 35 வருட கால நினைவு மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி இந்நிகழ்வு நடாத்தப்பட்டது.
ரத்மல்யாய ஹுபாஹ் ஜும்ஆ பள்ளி நிர்வாக உறுப்பினர்களும், பிரதேசத்தின் இளைஞர் சங்க குழுக்களும் இணைந்து, ஏற்பாட்டு குழு தலைவர் எம்.அஸ்ரின் தலைமையில் இத்தொடர் நடாத்தப்பட்டது.
இதில் அதிதிகளாக புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஐ.எம்.கியாஸ், பொறியியலாளர் எப்.எம்.பாஸில், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பார்த்திபன், தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம். ஹிஜாஸ், சமூகவியலாளர் முஹம்மத் ஜாஹித் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த போட்டி தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி வெள்ளிக்கிழமை (01) மாலை 04 மணிக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.


No comments