Breaking News

புத்தளம் இலக்கிய விழாவில் நாட்டார் பாடலில் கற்பிட்டி றிப்கான் செய்னா சுலைம் முதலாம் இடம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட வருடாந்த இலக்கிய விழா தம்பபன்னி அக்வெஸ்ஸ எனும் கருப்பொருளில் மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் நடைபெற்ற இவ் இலக்கிய விழாவில் கற்பிட்டியைச் சேர்ந்த மொஹமட் றிப்கான் செய்னா சுலைம் சிறுவர் பிரிவின் நாட்டார் பாடல் போட்டி நிகழ்வில் பங்கு பற்றி மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கற்பிட்டி பிரதேச மட்ட போட்டியிலும் இவர் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்ற இவர் கற்பிட்டி சின்னக்குடியிருப்பைச் சேர்ந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம் ஏ எம் எம் றிப்கான் எம் ஏ சீறூன் ஜஹான் தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.





No comments