72வது மீலாத் போட்டிகளுக்கான அனுமதி அட்டைகள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எம்.யூ.எம்.சனூன்
சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் (MICH) தஃவா மற்றும் மதக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட 72வது மீலாத் போட்டிகளுக்கான அனுமதி அட்டைகள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அந்தந்த அரசு மற்றும் அரச சார்பற்ற, சர்வதேச பாடசாலைகள், அஹதிய்யா பாடசாலைகள் மற்றும் மத்ரஸாக்கள் மூலம் முறையாக அனுப்பப்பட்டுள்ளன.
குறித்த இந்த போட்டிகள் யாவும் நவம்பர் மாதம் 01 ம் திகதி சனிக்கிழமை நடைபெற உள்ளன.
ஹிப்ல் மற்றும் மூன்று மொழிகளுக்குமான பேச்சுப்போட்டிகள் கொழும்பு 09, டெமடகொட வீதி, பாஷா விலாவில் நடைபெறும்.
எழுத்துப்போட்டிகள் மற்றும் மல்டி மீடியா விளக்கக்காட்சிப் போட்டிகள் வெள்ளவத்தை, லில்லி அவென்யூவில் உள்ள சோனக இஸ்லாமிய கலாச்சார வளாகத்தில் நடத்தப்படும்.
இது வரையும் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத போட்டியாளர்கள் போட்டிக்குழு தலைவரோடு 0773578986 எனும் இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments