JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் இலக்கிய விழாவில் இரு போட்டிகளில் முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான கற்பிட்டி பர்வின்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் மாவட்ட வருடாந்த இலக்கிய விழா தம்பபன்னி அக்வெஸ்ஸ எனும் கருப்பொருளில் மஹாவெவ முத்ராதேவி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக மற்றும் புத்தளம் மேலதிக மாவட்ட செயலாளர் புபுத்திகா எஸ்.பண்டார தலைமையில் நடைபெற்ற இவ் இலக்கிய விழாவில் கற்பிட்டியைச் சேர்நத கிராம உத்தியோகத்தர் எப் பர்வின் பாத்திமா திறந்த போட்டிகளான திரைப்பட விமர்சனம் மற்றும் கதையாக்கம் ஆகிய இரண்டு போட்டிகளிலும் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


கற்பிட்டி பிரதேச மட்ட போட்டியிலும் இவர் பங்கு பற்றி முதலாம் இடத்தை பெற்றார். என்பதுடன் இவர் கற்பிட்டி மண்டலக்குடா கிராம  உத்தியோகத்தராக கடமையாற்றி வருவதுடன் கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் பொருளாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال