உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
கல்பிட்டி பிரதேச சபை, புத்தளம் பிரதேச சபை மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபைகளுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு அண்மையில் (11) புத்தளம், மதுரங்குளியில் அமைந்துள்ள ட்ரீம் மண்டபத்தில் நடைபெற்றது.
ரம்ய லங்கா புத்தளம் பிராந்தியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், கல்பிட்டி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான நினைவுச்சின்னமும் தவிசாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments