புத்தளத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் முயற்சியில் இன்சைட் நிறுவனம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
புத்தளம் இன்சைட் அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் பயணம் என்ற ஒரு சமூக பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று சனிக்கிழமை (11) இரவு புத்தளம் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது
புத்தளத்தில் வாழ்ந்த முன்னோர்கள் வர்த்தக வியாபாரங்களை தொடங்குவதற்கு முக்கிய காரணம் பணம் உழைப்பது மட்டுமல்ல தனது சமூகம் அடுத்தவரிடம் கை யேந்தக் கூடாத ஒரு சமூகத்தையும் தனது சொந்த உழைப்பில் முன்னேறும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் இலங்கை நாட்டிற்கே ஒரு முன்மாதிரியான ஊராக புத்தளத்தை மாற்றி அமைக்க நாம் அணைவரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டும் என்ற கருத்து பட புத்தளம் எஸ்.ஏ.சீ.பீ மரைக்கார் உரையாற்றியதுடன்
இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு திறன்களை வழங்கி உள்ளான் அதன் அடிப்படையில் யாரும் யோசிக்க கூடாது தன்னால் எதுவும் முடியாது என்பதை தனக்குள்ள திறமைகளை வைத்து தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் எப்போதும் நாம் அடிமைத்தனமாக சம்பளம் பெறும் தொழில்களைத் தேடும் மனோநிலை பாடசாலை மட்டத்தில் இருந்து உருவாக்கப்படுகிறதுஅதற்கான முழு முயற்சியையே நம் சமூகமூம் மேற்கொள்கின்றது தவிர தொழில் வழங்குனர்களாக வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள படுவதில்லை இந்த நிலை மாற வேண்டும் தொழில் வழங்குனர்கள் புத்தளத்தில் உருவாக்கப்பட வேண்டும் அதற்கான முயற்சியாகவே இன்றைய இன்சைட் நிறுவனத்தின் இந்த கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் அந்த நோக்கம் வெற்றி பெற சகலரும் ஒன்றிணைந்து முயற்சிப்போம் என்ற கருத்துப்பட எக்ஸ்ஸலண்ட் ஆங்கில பாடசாலையின் அதிபர் எச் அஜ்மல் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
No comments