அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க், அல் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி புத்தளத்தில் கௌரவிப்பு.
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் அழைப்பை ஏற்று புத்தளத்திற்கு வருகை தந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க், அல் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி ஹஸரத் அவர்கள் புத்தளத்தில் உள்ள தலைமைகளால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் அழைப்பை ஏற்று புத்தளத்திற்கு வருகை தந்த அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் வெள்ளிக்கிழமை (10) புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ பெரிய பள்ளியில் ஜும்ஆ பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.
ஜும்ஆ தொழுகை நிறைவடைந்ததன் பின்னரே அவர் புத்தளம் தலைமைகளால் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் புத்தளம் பெரிய பள்ளியின் பரிபாலன சபை தலைவர் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம்.நிஜாம் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பி. ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் பிரத்தியேக செயலாளர் எம்.ஐ.எம்.ருஸ்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments