Breaking News

நாகவில்லு எருக்கலம்பிட்டி இளைஞர் கழக காற்பந்தாட்ட அணி தேசிய மட்டத்திலான போட்டி ஒன்றில் பங்கேற்றமைக்கான பெருமையை பெற்றுள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

இலங்கையின் 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் காற்பந்தாட்ட போட்டியில் நாகவில்லு எருக்கலம்பிட்டி இளைஞர் கழக அணி புத்தளம் மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்தில் பங்கேற்றமைக்கான பெருமையை பெற்றுள்ளது. 


அண்மையில் (10) பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த தேசிய மட்ட போட்டியில் பங்கு பற்றிய நாகவில்லு எருக்கலம்பிட்டி இளைஞர் கழக அணி, முதலாம் சுற்றில் காலி மாவட்ட இளைஞர் கழக அணியினை எதிர்கொண்டு 01 : 00 கோலினால் தோல்வியடைந்தாலும் தேசிய மட்ட போட்டி ஒன்றில் பங்கேற்றமைக்கான வரலாற்று பெருமையை தக்க வைத்துக்கொண்டுள்ளது.


குறித்த இந்த எருக்கலம்பிட்டி இளைஞர் கழக அணியானது ஏற்கனவே புத்தளம் பிரதேச செயலக அணிகளுக்கிடையில் நடைபெற்ற காற்பந்தாட்ட போட்டியில் பங்கேற்று புத்தளம் மாவட்ட சம்பியனாக மகுடம் சூடியுள்ள நிலையிலேயே தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.


தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஐ.எம்.கியாஸ் மற்றும் புத்தளம் ரத்மல்யாய வட்டார குழு உறுப்பினர் எம்.எப்.எம்.ஜாஹித் ஆகியோர் குறித்த இந்த அணியினை வழி நடாத்தி பதுளைக்கு அழைத்து சென்றிருந்தனர். 


இதற்கு முன்னின்று பல அர்ப்பணிப்புக்கு மத்தியில் இவர்களுக்கான பொருளாதார உதவிகளை ஏற்பாடு செய்த எம்.ஜே.எம். சிறாஜ், இவர்களை ஒருங்கிணைத்து வழிநடத்திய கழக தலைவர் ஆர்.நிஸாத், செயலாளர் ஏ.எம். அஹதீர், மற்றும் உறுப்பினர்கள், வீரர்களுக்கு பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் என்.எம். அப்ரார் ஆகியோருக்கு ஊர் சார்பாகவும்,கழக உறுப்பினர் சார்பாகவும் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.






No comments