புத்தளம் ஐ.எப்.எம். முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுகள்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெருவில் இயங்கும் புத்தளம் நகரின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளியான ஐ.எப்.எம்.முன்பள்ளியில் சிறுவர் தின நிகழ்வுகள் புதன்கிழமை (01) காலை இடம்பெற்றன.
முன்பள்ளியின் பொறுப்பாசிரியை ரூசி சனூன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இங்கு கல்வி பயிலும் 29 மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள்.
"உலகை வழி நடாத்த அன்பால் ஒன்றிணைவோம்" என்பது இவ்வருட சிறுவர் தினத்தின் தொணிப்பொருளாகும்.
அன்றைய தினம் மாணவச் செல்வங்களுக்கு ஆசிரியை அவர்களினால் சிறுவர் தினம் தொடர்பான விளக்கங்களும் வழங்கப்பட்டன. மாணவர்கள் யாவரும் மகிழ்ச்சியான முறையிலே ஆசிரியையுடன் இணைந்து பாடசாலையிலே சிறுவர் தினத்தை கொண்டாடினர்.
நிகழ்வின் இறுதியிலே அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் ஆசிரியையினால் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
முன்பள்ளிக்கு வருகை தந்த பெற்றார்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்பளிப்பு பொருட்களையும் மேலதிகமாக வழங்கி வைத்தனர்.
இதன்போது மாணவர்கள் இறை தியானத்திலும் பங்கேற்றனர்.
No comments