புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மன்சூர் அகடமியினால் விஷேட வகுப்புகள் ஏற்பாடு
எம். யூ. எம். சனூன்
புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையில் மன்சூர் அகடமியினால் விஷேட வகுப்புகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப நிகழ்வுகள் அண்மையில் (16) பாடசாலையில் இடம்பெற்றது.
மன்சூர் அகடமியின் நிறைவேற்று தலைவர் எம்.எம்.அஹ்மத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் ஸ்தாபக தலைவர், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். ஆப்தீன் எஹியா கலந்து கொண்டார்.
கடையாமோட்டை தேசிய பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தெளபீக், நல்லாந்தழுவை ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம்.வை. ஹுதைபா, நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் முதலாவதும், ஓய்வு பெற்ற அதிபருமான என். எம். முஹம்மது நஜீப், கடையாமோட்டை முஸ்லிம் தேசிய பாடசாலையின் முதல் பட்டதாரியும், கலை பிரிவின் புவியியல் பாட ஆசிரியருமான ஏ. எச். பௌசுல் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட அறிவிப்பாளர், தேடல் மீடியா கல்லூரியின் தலைவர் எஸ்.ஐ.எம். ஹம்தி நிகழ்ச்சியினை சுவைபட தொகுத்து வழங்கினார்.
அங்கு உரையாற்றிய மன்சூர் அகடமியின் நிறைவேற்று தலைவர் எம்.எம்.அஹ்மத் தனது உரையில்,
மாணவர்களின் கல்விக்கு அத்திவாரமாக மன்சூர் அகடமி செயற்படும். சிறந்த ஆசிரியர் குழாத்தினரை மையமாக கொண்டதாக முதல் கட்டமாக தரம் 2 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்காக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2026 ஜனவரி மாதத்தில் இருந்து தரம் 06 தொடக்கம் தரம் 11 வரை மாணவர்களுக்கும் மேலும் உயர்தர பிரிவு மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்கும் நோக்கில் அவர்களின் மேலதிக வகுப்புகள் ஏற்பாடும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான விண்ணப்பம் வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.
No comments