Breaking News

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஐ.என். எம்.எம். லாஹிர் நியமனம்

 எம். யூ. எம். சனூன்

புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 28 வது புதிய அதிபராக ஐ. என்.எம்.எம். லாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார். 


இன்று (18) புத்தளம் தெற்கு கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம்.நௌஸாத் முன்னிலையில் இவர் கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


கொத்தான்தீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம், புத்தளம் திகழி முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்றதுடன் தனது உயர் கல்வியை கம்பளை ஸாஹிரா கல்லூரியில் வணிகத்துறையில் கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.


கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக மாணி பட்டத்தையும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவையும் நிறைவு செய்த இவர் கல்வி முதுமாணி பட்டத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார். 


தனது முதலாவது ஆசிரியர் பணியை கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஆரம்பித்து புத்தளம் கனமூலை முஸ்லிம் மகாவித்தியாலயம், புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை மற்றும் புத்தளம் கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக கடமை புரிந்து நீண்ட காலம் பணியாற்றிய இவர் 18 ஆம் திகதி கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 28 வது அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.


இந்நிகழ்வில் புத்தளம் தெற்கு கோட்டக்கல்வி பணிமனையின் கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம்.நௌஸாத், அக்கறைப்பற்று பிராந்தியத்தின் அயல் பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை முன்னாள் அதிபர்கள், ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் உட்பட அதன் நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.











No comments