குறைவாக வாக்கெடுத்து ஜனாதிபதி ஆனவர் அனுர குமார திசாநாயக்க-எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
பாறுக் ஷிஹான்
ஜனாதிபதி தேர்தலில் கூட திரு அனுர குமார திசாநாயக்க அவர்கள் 50 சதவீதம் பெற்றிருக்கவில்லை.42 சதவீதம் தான் அவர் பெற்றிருந்தார்.முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்று ஜனாதிபதியானவர் அவர் தான் என தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று(14) மாலை கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
கிழக்கு மாகாண தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இருக்கிறது.ஆனால் அரசாங்கம் தேர்தலை சந்திப்பதற்கு பயந்து கொண்டு இதனை இழுத்தடிப்பதாக எமக்கு தோன்றுகின்றது.தற்போதைய அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் 2/3 விகிதம் பாராளுமன்றத்தில் கிடைத்துவிட்டது.
ஜனாதிபதி தேர்தலில் கூட திரு அனுர குமார திசாநாயக்க அவர்கள் 50 சதவீதம் பெற்றிருக்கவில்லை 42 சதவீதம் தான் அவர் பெற்றிருந்தார்.முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்று ஜனாதிபதியானவர் அவர் தான்.
அவர் ஜனாதிபதி ஆன பிற்பாடு ஒரு அலை ஒன்று உருவானது.அதிலிருந்து ஏதோ ஒரு அடிப்படையில் 2/3 பெரும்பான்மை அவர்களுக்கு கிடைத்து விட்டது
ஆனால் இன்று அரசாங்கத்திற்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் கூட இன்று தாங்கள் பிழையானவர்கள் தெரிவு செய்து விட்டோம் என்ற ஒரு மனநிலையில் இருந்து வருகிறார்கள்.இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த மக்களின் நிலைப்பாடு தெளிவாக விளங்கி இருக்கிறது.எங்களது கட்சியும் கூட இந்த உள்ளுராட்சி தேர்தலில் எழுச்சி கண்ட நிலையில் காணப்படுகிறது.
எனவேதான் அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்தி விட்டு அதில் தோல்வி அடைந்து விட்டால் என்ன செய்வது என்று வெட்கப்படுகிறார்கள் அதனால் தான் என்னவோ அதனை நடத்தாமல் இருக்கிறார்கள்.தேர்தலுக்கு பயந்து தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு பின்வாங்கிக் கொண்டு தேர்தலை பிற்போடுவது ஒரு முறையற்ற ஒரு செயற்பாடாகும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.


No comments