Breaking News

புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மர நடுகை விழா.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மாநகர சபையின் ஏற்பாட்டில் மர நடுகை வைபவம் ஒன்று புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.


கல்லூரி அதிபர் சரீனா பர்வீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாநகர  சபையினால் வழங்கி வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பாடசாலை வளாகத்தில் நடப்பட்டன.


இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், மாநகர சபை உறுப்பினர்கள், பாடசாலையின் முகாமைத்துவ குழுவினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத்தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








No comments