கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நெடுங்குளம் பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சிரமதான நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் வேண்டுகோளின் பேரில் புத்தளம் நெடுங்குளம் பகுதியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தில் சிரமதான நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது .
இந்த சிரமதான நிகழ்வு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இடம்பெற்றதோடு இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், மேயர் ரின்சாத் அஹ்மத், மாநகரசபை உறுப்பினர்களான இப்லால் அமீன், சித்தி சலீமா, தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார அமைப்பாளர் சர்ராஜ் லாபிர், நான்காம் வட்டார அமைப்பாளர் எம்.நபீல், ஐந்தாம் வட்டார அமைப்பாளர்களான நப்லான் நபீஸ், எம்.பஸ்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெடுங்குளம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகள் இதன் மூலம் வருகை தந்தவர்களின் மூலம் துப்புரவு செய்யப்பட்டது. பிரதேசத்தின் பொதுமக்களும் இதில் இணைந்து கொண்டார்கள்.
No comments