Breaking News

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் பாராளுமன்ற உறுப்பினரோடு கலந்துரையாடல்.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.முஹம்மது பைசல் புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரை சந்தித்து பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் அண்மையில்  கலந்துரையாடினார். 


கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது.


இந்த கலந்துரையாடலில் புத்தளம் மாநகர சபையின் உறுப்பினர்களான இப்லால் அமீன், எம்.டீ.எம். சஹ்ரான்,ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் புதிய செயலாளர் பஹ்மி சஹீத் உள்ளிட்ட பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இதன்போது பாடசாலைக்கு தேவையான பல்வேறு விதமான வளங்கள் தொடர்பாகவும்  பாராளுமன்ற உறுப்பினரோடு விரிவாக கலந்துரையாடப்பட்டன.






No comments