சிலாபம் வலயத்தின் இஸ்லாமிய போட்டிகள் அல்மிஸ்பாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
எம்.யூ.எம்.சனூன்
சிலாபம் கல்வி வலயத்துக்கான இஸ்லாமிய கலாச்சார போட்டி நிகழ்ச்சிகள் மாதம்பை அல்மிஸ்பா மகா வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.எல். அன்வர் தலைமையில் அண்மையில் (17) வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்வு சிலாபம் வலய கல்வி பணிமனையின் தமிழ் மொழி மூல பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி ஹனிதா கமலேந்திரனின் மேற்பார்வையில் ஆசிரிய ஆலோசகர் தஹ்லானின் ஒருங்கிணைப்பின் கீழ் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளின் மாணவர்கள் பங்கு பற்றியதோடு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments