Breaking News

ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.அர்ஜூன அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் வலயக்கல்விப் பணிமனையின் ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.அர்ஜூன அவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று புத்தளம் மதவாக்குளம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை காலை (23) இடம்பெற்றது.


பாடசாலை அதிபர் என்.எல்.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர் அர்ஜுன  அவர்கள் வரவேற்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


இந்நிகழ்வில் புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.டீ.என்.பிரசாத், பள்ளம கோட்டக்கல்வி பணிப்பாளர் அசங்க பிரதீப் குமார மற்றும் பள்ளம கோட்டக்கல்வி பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் எக்கா அண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.










No comments