புத்தளத்தில் போதையை ஒழித்து கட்ட தீவிரம். ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை வழக்கறிஞர்களுடனான கலந்துரையாடல்.
எம்.யூ.எம்.சனூன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளையின் ஏற்பாட்டில் வழக்கறிஞர்களுடன் போதை அற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் எனும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.
ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி தலைமையில் புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிஸார் மற்றும் உறுப்பினர்கள், சர்வமத குழு உறுப்பினர்கள், புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் மற்றும் சமூக நலன்விரும்பிகள் இணைந்து ஜம்இய்யாவின் காரியாலயத்தில் இந்த கலந்துரையாடல் (20) இடம்பெற்றது.
மாநகர சபையின் பிரதி மேயர் நுஸ்கி நிசார் இதன்போது போதையற்ற சமூகத்தை உருவாக்க அரசியல் ரீதியாக பல உதவிகளையும் மேல் அதிகாரிகளை சந்தித்து பேசுவதற்க்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதை கூறினார்.
மாநகர சபை உறுப்பினர் இஷாம் மரைக்கார் மற்றும் எம்.எம்.முர்ஷித் அவர்களினாலும் புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ. நஜீம், முன்னாள் பாத்திமா பெண்கள் பாடசாலையின் உப அதிபர் எம்.ஓ.ஜே.நிஜாம் மூலமாக போதையற்ற சமூகத்தை உருவாக்க ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து Puttalam Bar Association தலைவர் சட்டத்தரணி எம்.என்.எம். நத்வியினால் போதையற்ற சமூகத்தை உருவாக்க சமூக ரீதியாக எடுக்கப்பட வேண்டிய முன்னெடுப்புகள் என்ன என்பதை தெளிவுபடுத்தினார்.
அதனை தொடர்ந்து சட்டத்தரணி ஏ.டபிள்யூ.அஷ்ரக் நாட்டின் சட்டதிட்டங்களை தெளிவுபடுத்தினார்.
தொடர்ச்சியாக புத்தளம் சமூகத்திற்கு பல சேவைகளை செய்து கொண்டு வரும் Puttalam Bar Association தலைவர் நத்வி அவர்களுக்கு ஊர் தலைமைகள் ஒன்றாக நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.
No comments