Breaking News

கற்பிட்டியில் கடலுக்கு சென்ற இருவரை காணவில்லை

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி சின்னக்குடியிருப்பு பகுதியின் கடற்கரை ஊடாக திங்கட்கிழமை (22) டிங்கி படகில் கடலுக்கு சென்ற இருவர் செவ்வாய்க்கிழமை (23) காலை வரை கரைக்கு திரும்ப வில்லை 


இது பற்றி தெரியவருவதாவது கற்பிட்டி சின்னக்குடியிருப்பு கடற்கரையில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 35 மற்றும் 45 வயதுகளை உடைய இருவர் டிங்கி படகு மூலம் கடலுக்கு சென்றதாகவும் சென்றவர்கள் செவ்வாய்க்கிழமை காலை வரை கரைக்கு திரும்பவில்லை எனவும் இவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





No comments