உலக அமைதி தினத்தைக் குறிக்கும் வகையில் குளியாப்பிட்டியில் அமைதி நடைப்பயணம்.
எம்.யூ.எம்.சனூன்
உலக அமைதி தினத்தைக் குறிக்கும் வகையில் "அனைவரும் மனிதர்கள்" என்ற நோக்கத்துடன் ஒரு அமைதி நடைப்பயணம் குளியாப்பிட்டி நகரில் அண்மையில் இடம்பெற்றது.
சர்வோதய மற்றும் குளியாப்பிட்டி பிராந்திய சர்வமதக் குழு, மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் சிறுவர் கழகங்களுடன் இணைந்து மத சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குளியாப்பிட்டி தர்மசோக பௌத்த மையத்திலிருந்து தொடங்கிய இந்த அமைதி நடைப்பயணம், குளியாப்பிட்டி நகராட்சி மன்ற மைதானம் வரை சென்றது.
பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு குழுக்கள் இதில் பங்கேற்றன.
மேலும் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த ஒரு குழுவும் இந்த முயற்சியில் இணைந்து கொண்டமை பாராட்டத்தக்கது.
மேலும், இதற்கான ஊடக ஒளிபரப்பை குருநாகல் செய்தியாளர் பஸ்லான் வழங்கினார். அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் குளியாப்பிட்டி சர்வோதய மாவட்ட அலுவலகத்தின் சமூகத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிராந்திய சர்வமதக் குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி நிலுஷா பிரியங்கனி, அலுவலக ஊழியர்களின் உதவியுடன் செய்திருந்தார்.
அனைத்து மதங்களின் மதத் தலைவர்களின் அமைதிச் செய்திக்குப் பிறகும், மற்றவர்களின் கருத்துகளுக்குப் பிறகும் இதன் பணிகள் செவ்வனே நிறைவடைந்தன.
No comments