Breaking News

இலங்கை பந்தய புறாக்கள் சம்மேளனம் (எஸ்.எல்.ஆர்.பி.எப்) நடாத்திய பந்தய புறாக்கள் போட்டியில் புத்தளம் மாவட்ட போட்டியாளர்கள் வெற்றி.

எம்.யூ.எம்.சனூன்

இலங்கை பந்தய புறாக்கள் சம்மேளனம் (எஸ்.எல்.ஆர்.பி.எப்) இந்த முறை நடாத்திய பந்தய புறாக்கள் பறக்க விடும் போட்டியில் புத்தளம் மாவட்ட பந்தய புறாக்கள் உரிமையாளர்கள் வெற்றி அடைந்திருக்கின்றார்கள்.


வருடாந்தம் இந்த மாதிரியான போட்டிகளை  இலங்கை பந்தய புறாக்கள் சம்மேளனம் நடாத்தி வருகிறது.


இந்த முறை நடத்தப்பட்ட போட்டிகளில் புத்தளம் மாவட்ட பந்தய புறா சொந்தக்காரர்கள் வெற்றிகளை பெற்றுள்ளதால், வெற்றி பெற்ற இடங்களில் பரிசளிப்பு நடாத்தப்படல் என்ற நியதிக்கு அமைய இம்முறை பரிசளிப்பு வைபவம் புத்தளம் கார்ட்ன் வீவ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் கலந்து சிறப்பித்தார்.


சம்மேளனத்தின் தலைவர் அல் ஹாஜ் ஓ.கே.டீ.எம்.சியாம், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் முஹம்மது கியாஸ் உள்ளிட்ட சம்மேளன நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.











No comments