JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் போல்டன் கழகம் 29 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணத்தை தனதாக்கி சாதனை.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் காற்பந்தாட்ட லீக் புத்தளத்தில் தொடராக நடாத்தி வந்த காற்பந்தாட்ட தொடரில் புத்தளம் நகரின் மிகப் பழைமை வாய்ந்த போல்டன் கழகம் 29 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணத்தை தனதாக்கி சாதனை படைத்திருக்கின்றது.


இந்த தொடரின் பரபரப்பான இறுதிப் போட்டி அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.


இந்த  இறுதிப்போட்டியில் புத்தளம் நகரின் மிகப் பழைமை வாய்ந்த  அணிகளான நியூ ஸ்டார்ஸ் அணியும், போல்டன் அணியும் பலப்பரீட்சை நடாத்தின.


இந்த போட்டியில் இடைவேளைக்கு முன்பாக எந்த அணிகளும் கோல்களை பெறாத நிலையிலே இடைவேளைக்குப் பின்பாக போல்டன் அணி அதிரடியாக மூன்று கோல்களை தொடராக பெற்றுக் கொண்டது.


போல்டன் அணிக்காக அவ் அணியின் வீரர்களான முஹம்மது முர்ஷித், முஹம்மது அனிக், முஹம்மது முபாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.


போல்டன் அணியினை அதன் முன்னாள் வீரர் எம்.எம். நிஸ்வர் வழி நடாத்தி இருந்தார்.


லீக் தலைவர் முஹம்மது யமீன்  தலைமையில் நடைபெற்ற இதன் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டதோடு பிரதி மேயர் நுஸ்கி நிஸார் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


குறிப்பு :

வெள்ளை நிற அங்கி சம்பியன் போல்டன் அணியினர்.















Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال