புத்தளம் பெரிய பள்ளி குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் மீலாதுன் நபி விழா.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பெரிய பள்ளி குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவு மகளிர் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீலாதுன் நபி நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (12) மாலை புத்தளம் பெரிய பள்ளி பிரதான வீதியிலே பகிரங்கமான இடத்தில் இடம்பெற்றது.
இந்த மீலாத் தின நிகழ்வுக்கு பிரதான அனுசரணையை புத்தளம் நுஸ்கி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயருமான நுஸ்கி நிசார் வழங்கி இருந்தார்.
இந்த நிகழ்விலே மாணவர்களுடைய அல்கிராஅத், பேச்சு, கஸீதா இஸ்லாமிய கீதம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின. நிகழ்வில் பங்கு பற்றிய அனைத்து சிறார்களுக்கும் பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்விலே புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், பிரதி மேயர் நுஸ்கி நிசார், மாநகர சபை உறுப்பினர் எம். எம். முர்ஷித், புத்தளம் பெரிய பள்ளியின் பரிபாலன சபை தலைவர், ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் ஏ.டீ.எம். நிஜாம், நிர்வாக சபை உறுப்பினர், கிராம சேவையாளர் என். எம். ரஸ்மி, பிரதி மேயரின் இணைப்பாளர்களும், தொழில் அதிபர்களுமான முஹம்மது நிசாம் மற்றும் எம்.என்.எம்.பஸாரத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
No comments