Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு


(எம். யூ. எம். சனூன்)

புத்தளம் தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்குமான பாராட்டு நிகழ்வு அண்மையில் (12) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உட்பட கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், பழைய மாணவியர் சங்கம் மற்றும் சமூகவியலாளர் எம்.ஏ.எம். ஹஸ்மத்கான் ஆகியோர் அனுசரணை வழங்கி இருந்தனர்.


இம்முறை 05 ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் முகம்மது பஸ்லின் பௌஸ் அஹமட் (147), முகம்மது பைரூஸ் முகம்மது அப்னான் (141), அஜ்வாத் பாத்திமா அஸா (137) ஆகிய 03 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்திருந்தனர்.


இதேவேளை பல்கலைக்கழகம் தெரிவான மூன்று  மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர்.

சதகதுல்லா மஸியா 3 ஏ (கொழும்பு பல்கலைக்கழகம்), 

முகம்மது ஹில்மியாஸ் பஸ்ரா3 ஏ (கிழக்கு பல்கலைக்கழகம்),

முகம்மது பாயிஸ் முகம்மது பாதில் 2 ஏ 1 பீ (தென் கிழக்கு பல்கலைக்கழகம்)

ஆகிய மூவரே கௌரவிக்கப்பட்டவர் ஆவர்.


இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.























No comments