தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் மஸ்கெலியா சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் 41 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
எம்.யூ.எம்.சனூன்
2025 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா சென் ஜோசப் ஆரம்பப்பிரிவு தமிழ் வித்தியாலயத்தில் 41 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர். அத்துடன், மெலிஷா சேர்லின் என்ற மாணவி 176 அதி கூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
சித்தியடைந்த மாணவர்கள், அவர்களுக்கு போதித்த வகுப்பாசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் திரு. பீ. நடராஜ் தெரிவித்துள்ளார்.
இதே வேளை சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் பாராட்டி கௌரவித்து பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்குகின்ற பிரமாண்டமான நிகழ்வு ஒன்று அக்டோபர் மாதம் மூன்றாம் திகதி மஸ்கெலியா பீ.எம்.டீ கலாச்சார மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக அதிபர் பீ.நடராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments