கல்முனை மாநகர சபையின் நடமாடும் சேவை.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட நடமாடும் சேவை நேற்று திங்கட்கிழமை (15) வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கருத்திட்டத்திற்கு அமைவாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலின் பேரில் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தலைமையில் கல்முனை மாநகர சபை எல்லையினுள் உள்ளூராட்சி வார செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக இடம்பெற்ற நடமாடும் சேவையின்போது கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தகர்களினதும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள வியாபாரிகளினதும் நீண்ட காலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகர பஸாரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொண்ட மாநகர சபை உத்தியோகத்தர் குழுவினரால், வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தல்களும் தெளிவூட்டல்களும் வழங்கப்பட்டன.
No comments