Breaking News

குருணாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியில் விபத்து

(உடப்பு செய்தியாளர் - க.மகாதேவன்)

குருணாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியில் திங்கட்கிழமை காலை (11) எரிபொருள் ஏற்றிய கொள்கலன் ஒன்று சாரதியின் நித்திரைக் கலக்கம் காரணமாக அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் சாரதிக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


அத்துடன் அருகிலிருந்த கட்டடத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









No comments