யூதர்கள் கடவுளின் குழந்தைகளா ?
யூதர்கள் கடவுளின் குழந்தைகள் என்றும், கடவுளினால் ஆசீர் வதிக்கப்பட்டவர்கள் என்றும், அதனால்தான் அவர்களுக்கு இறைவன் தொடர்ந்து வெற்றிகளை வழங்குகின்றான் என்று யூதர்களும், யூத சார்புடைய ஊடகங்களும் செய்திகளை பரப்புகின்றன.
ஆனால் யூதர்கள் அடைந்த வெற்றிகள் எவ்வாறானது ? எவ்வளவு காலமாக வெற்றி பெற்றார்கள் ? போன்ற யூதர்களின் கடந்தகால வரலாறுகளை அறிந்தவர்கள் அவ்வாறு கூறமாட்டார்கள்.
1948 இல் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல் என்னும் நாடு உருவாகும் வரைக்கும் யூதர்கள் நாடற்றவர்களாகவும், எந்தெந்த நாடுகளில் வாழ்ந்தார்களோ அந்தந்த நாடுகளில் இருந்து விரட்டப்பட்டும், கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டு உலகம் முழுவதும் அலைந்து திரிந்தார்கள்.
எந்தவொரு நாட்டிலும் முஸ்லிம்களினால் யூதர்கள் விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாறுகள் இல்லை. அதாவது கிரிஸ்தவர்களினாலும் மற்றும் ஏனைய மதத்தவர்களினாலேயே யூதர்கள் அழிக்கப்பட்டார்கள்.
யூதர்களுக்கு ஏற்பட்ட அவலநிலைக்கு அவர்களது நடவடிக்கைதான் காரணமாகும். உலகம் அழியும் வரைக்கும் அவர்கள் திருந்தப்போவதில்லை.
பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் யூதர்களுக்கு தொடர்ந்து பக்கபலமாக இல்லாதிருந்திருந்தால் இஸ்ரேல் என்னும் தேசம் எப்போதோ அழிந்திருக்கும்.
1967 இல் நடைபெற்ற ஆறு நாட்கள் யுத்தத்தில் கிடைத்த வெற்றிதான் இஸ்ரேலுக்கு உலக அளவில் பாரிய இமேஜை உருவாக்கியது. அவர்கள் அடைந்த வெற்றிகளில் அதிகமானவை இஸ்லாமிய நாட்டு முக்கியஸ்தர்களுக்கு இலஞ்சம் வழங்கியதன் மூலம் பெறப்பட்டதாகும்.
எனவே 1948 க்கு முன்பு யூதர்கள் எந்தவொரு வெற்றிகளையும் பெற்றதில்லை. அவ்வாறென்றால் அப்போது இறைவன் ஏன் அவர்களை பல நூறு வருடங்கள் அலையவைத்தான் ?
70 தொடக்கம் 80 வரையான ஆண்டு காலங்களில் உலகில் ஒவ்வொரு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதனை வரலாற்று ரீதியாக அறிகிறோம். ஒரே தரப்பு தொடர்ந்து வெற்றி பெறுவதுமில்லை, தோல்வி அடைவதுமில்லை. அந்தவகையில் இன்றைய பாலஸ்தீன் – இஸ்ரேல் போரானது உலக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிகிறது.
யூதர்கள் விரட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட வரலாற்று சம்பவங்களை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments