Breaking News

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்த ஒரு நாள் இலவச மருத்துவ முகாம்.

எம்.யூ.எம்.சனூன்

சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி ஏற்பாடு செய்த ஒரு நாள் இலவச மருத்துவ முகாம் இம்முறை யாழ்ப்பாணத்தில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் யாழ். மாவட்ட பனிப்பாளரும், யாழ். முஸ்லிம் ஒன்றியத்தின் தலைவருமான ஆரிப் அப்துல் பரீத் மற்றும் யாழ் ஊடக பணிப்பாளர் கந்தசாமி கருணாகரன் தலைமையில் (10) யாழ். கதீஜா முஸ்லிம் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.


இந்த இலவச மருத்துவ முகாமில் தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள், இரத்த பரிசோதனை, உயர் இரத்த அழுத்த பரிசோதனை, கண் பரிசோதனை, நீரிழிவு பரிசோதனை  உள்ளிட்ட பல பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் வைத்தியர்களான கே.கோபி கிருஷ்ணா, பாலகிருஷ்னன் ராகு உள்ளிட்ட வைத்திய குழாமினர் கலந்து கொண்டு வைத்திய சிகிச்சைகளை இலவசமாக வழங்கி வைத்தனர்.


இந்த நிகழ்வுக்காக சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் தலைவரும், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகரும், நாசா விஞ்ஞானியும், அமெரிக்க நாட்டின் இராஜதந்திர பணி தலைவருமான பேராசிரியர் டாக்டர். மதுகிருஷான், தவிசாளர் மஹ்சூம், தலைவர் அமீர் கான், துணை தலைவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரம் தொடர்பான பணிப்பாளர் திருமதி ஷிரின்,

யாழ். மாவட்ட பணிப்பாளரும், யாழ் முஸ்லிம் ஒன்றியத்தின் தலைவருமான ஆரிப் அப்துல் பரீத்

மற்றும் யாழ் மாவட்ட பணிப்பாளர் கந்தசாமி கருணாகரன், யாழ் மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.ஜி. தஸ்லீம், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுல்தான் ரஹீம் 

மற்றும் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணியின் குழும பணிப்பாளர் மற்றும் ஊடக பணிப்பாளர்

ஊடகவியலாளர் முஹம்மது பஸ்லான் உள்ளிட்டோர் இந்த இலவச மருத்துவ முகாமிக்கு சிறப்பு அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர்.


இந்த இலவச ஒரு நாள் மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமது பரிசோதனைகளை மேற்கொண்டனர். 


பரிசோதனைகளின் அடிப்படையில் மருத்துவர் மூலம் நோயாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் மேலும் சிலருக்கு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான கடிதங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.


மேலும் இந்த நிகழ்விற்காக யாழ் முஸ்லிம் ஒன்றிய பிரமுகர்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.


இந்த நிகழ்விற்கான தொண்டர்களாக யாழ் கதீஜா முஸ்லிம் வித்தியாலய மாணவிகள், யாழ் ஒஸ்மானியா மற்றும் யாழ் மத்திய கல்லூரி மாணவ மாணவிகள், ரெட் கிரோஸ் அமைப்பின் திருமதி டி.எம்.என். சீனியா தலைமையிலான குழு உறுப்பினர்கள் இந்த ஒரு நாள் இலவச முகாமுக்கு ஒத்துழைப்பை வழங்கி இருந்தனர்.


இந்நிகழ்விற்கான அனுசரணையை யாழ் முஸ்லிம் ஒன்றியம் டொபாஸ் நிறுவனம் மற்றும் லைக் தமிழ் நிறுவனமும் வழங்கி இருந்தன.


நரம்பியல் வைத்தியர், கடந்த கால யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டு 

நடக்கும் திறனை இழந்து தற்போது சக்கர நாற்காலியில் இந்த மருத்துவ முகாமுக்கு வருகை தந்திருந்த போது உலகளாவிய பணியினால் அவர் கௌரவிக்கப்பட்டார்.


நிகழ்வின் இறுதியில் சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மூலமாக தொண்டர்களாக கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் அதிதிகள் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.


எதிர்காலத்தில் இது போன்ற பல இலவச முகாம்கள் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மனித உரிமைகள் உலகளாவிய பணி மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.












No comments