அஷ்ஷெய்க் சமூன் எஸ்.ரமழான் தமிழாக்கிய "ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுகளும் பதில்களும்" நூல் வெளியீடு.
இலங்கை தாருத் தவ்ஹீத் காலாபீடத்தில் பட்டம் பெற்றவரும் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டாதாரியுமான அஷ் ஷெய்க் சமூன் எஸ்.ரமழான் அவர்கள் மொழிபெயர்த்த *“சஹீஹுல் புகாரீ கிரந்தத்திற்கு எதிரான நவீன கால குற்றச்சாட்டுக்களும் அதற்கான பதில்களும்”* எனும் நூல் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/08/2025) அன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை அக்குரணை மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் அல் இத்கான் – ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்கான ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் வெளியீடு செய்யப்படவுள்ளது.
மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அல் ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் அவர்கள் தலைமை தாங்கும் இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலாநிதி ரிஷாத் முஹம்மத் சலீம் சஹ்வி, ரியாதி அவர்கள் சிறப்பிக்கவுள்ளார். இந்நிகழ்வில் நூல் விமர்சனத்தை அஷ் ஷேய்க் வைத்தியக் கலாநிதி டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்கள். அத்தோடு தமிழுலகு அறிந்த கலாநிதி முபாரக் மதனி, அல் இத்கான் ஆய்வு மையத்தின் தலைவர் கலாநிதி அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி, உண்மை உதயம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் அஷ் ஷெய்க் எஸ்.எச். எம் இஸ்மாயில் சலபி, கலாநிதி அஷ் ஷெய்க் ஷிபான், கலாநிதி அஷ்ஷெய்க் சாஹுல் ஹமீத், இன்னும் பல அரபுக் கல்லூரி முதல்வர்கள், உஸ்தாத்மார்கள்,மற்றும் பல்வேறு துறைசார் சிறப்புப் பெருமக்கள், நலன் விரும்பிகள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந்நூலை தமிழ் படுத்தியிருக்கும் அஷ்-ஷெய்க் ரமழான் சமூன் (B.A.Hons, MA, PGDE) அவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நகரிகத்துறை பட்டதாரியாவார். அரபு விஷேட துறையில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், தனது முதுகலைமாணிப் பட்டத்தை அதே பல்கலைக் கழகத்தில் இஸ்லாமிய கலாசாரத் துறையில் பெற்றுக்கொண்டார். இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய வரலாறு தொடர்பாகவும் ஏனைய பொது விடயங்கள் தொடர்பாகவும் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்தோடு ‘சிலுவை யுத்தங்கள்’, ‘இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய வழிகெட்ட பிரிவுகள்’ என்ற நூற்களை எழுதியிருப்பதோடு, 'தவ்ஹீதின் யதார்த்தங்கள்' என்ற தலைப்பில் இமாம் அப்துர் ரஹ்மான் ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் 'அல் கவ்லுஸ் ஸதீத்' என்ற நூலையும் அல்வஜீஸ் எனும் அப்துல்லாஹ் எழுதிய நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE)மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அரசாங்க பாடசாலைகளுக்கான ஆசிரியர் கைநூல் தயாரிப்புக்கான எழுத்தாளர் குழுவில் அங்கம் வகித்துள்ளார். அத்தோடு இலங்கைக் கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் அரச பாடசாலைகளுக்கான அரபு,இஸ்லாம், இஸ்லாமிய நாகரிகம், ஆகிய பாடங்களுக்கான பாடநூலாக்கக் குழுவின் அங்கத்தவராவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு இலங்கை முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட அஹதியா தர்மச்சாரி பாடசாலைகளுக்கான பாடநூல் குழுவிலும் அங்கம் வகித்துள்ளார். அத்தோடு பு/தில்லையடி முஸ்லிம் வித்தியாலயம், பு/நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலயம், பு/நாகவில்லு நவோதய பாடசாலை என்பவற்றில் பல வருடங்களாக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அவர் ‘உண்மை உதயம்’ என்ற சஞ்சிகையின் துணை ஆசிரியராக பல வருடங்கள் பணிபுரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நூல், மிக உயர்ந்த நிலையில் மதிக்கப்படுகின்ற ஸஹீஹுல் புகாரி, முஸ்லிம் போன்ற ஆதார கிரந்தங்களுக்கு எதிராகவும் சஹீஹான ஹதீஸ்களுக்கு எதிராகவும் அடிமட்ட அறிவில் இருக்கக்கூடிய நாம், உண்மை நிலை தெரியாமல் பேசக்கூடாது என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. இமாம் புகாரி எவ்வளவு பெரிய ஆய்வாளர்; அவர் இத்துறையில் உதித்த ஒரு ஜீனியஸ்; அவரின் ஆய்வை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளமைக்கான நியாயம் யாது என்பதனை இந்நூல் மிக அழகாக விபரிக்கின்றது.
இந்த நூலை வாங்குவதும் படிப்பதும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதும் அன்பளிப்புச் செய்வதும் நாம் நபிகளாரின் சுன்னாவுக்கு செய்யும் ஒரு பங்களிப்பாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இந்நூலைப் பெற்றுக்கொள்ள:
🏷 விலை : 300.00
📦 தபாலில் பெற: 450.00
📞 +94 72 117 6625 📞 +94 76 760 5275
No comments