JobVibe.lk - Sri Lanka Job Portal

க. பொ. த சாதாரண தர பரீட்சையில் 6A முதல் 9A வரை சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

செய்தி நிருபர்: முபாறக் அஸ்லம் 

க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் 6A முதல் 9A வரை சிறப்பாகச் சித்தி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (10) ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற்றது.


STR இளைஞர் அணி ஏற்பாடு செய்த  முப்பெரும் விழா  சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்  அல் ஹாபிழ் ஹாதிக் இப்ராஹிம் தலைமையில் மிக பிரமாண்டமாக இடம்பெற்றது.


இவ் விழாவின் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான மாஹிர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.


சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாருமான நௌசாட், மற்றும் சம்மாந்துறை பிரதேச உப தவிசாளர் வினோத்காந், மாநகர சபை உறுப்பினர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள்,  அமைப்பாளர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர்கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال