Breaking News

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக புத்தளம், ஹுஸைனியாபுரத்தை சேர்ந்த அப்துல் சுகூர் நஸ்லியா பேகம் தேர்வு.

எம்.யூ.எம்.சனூன்

வெளியிடப்பட்டுள்ள இலங்கை கல்வி நிர்வாக உத்தியோகத்தர்களை தேர்ந்தெடுப்பதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வு பெறுபேறுகளின் அடிப்படையில் புத்தளம் ஹுஸைனியா புரத்தை சேர்ந்த ஆசிரியை அப்துல் சுகூர் நஸ்லியா பேகம்  சித்தியடைந்துள்ளார்.


புத்தளம் மாவட்டத்தில் மாத்திரமல்லாது வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழி மூலம்  மாத்திரமின்றி ஒரே ஒரு  முஸ்லிம் சமயத்தினை சேர்ந்தவராகவும் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் பெரியமடுவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தற்போது ஹுசைனியாபுரத்தில் வசித்துவருகின்றார். புத்தளம் உலுக்காப்பள்ளம் பாடசாலையின் பழைய மாணவியான இவர்

புத்தளம் விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞான பாட பட்டதாரி ஆசிரியராக கடமை ஆற்றியும் வருகின்றார்.


இவர் ஓய்வு பெற்ற வட மாகாண பிரதி விவசாய பணிப்பாளர் அப்துல் சுகூர்,  ஓய்வு பெற்ற ஆசிரியை ஹுமைதா உம்மா தம்பதிகளின் புதல்வியும், கல்பிட்டி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ். நிஸ்மியின் மனைவியும் ஆவார்.






No comments