எம்.பிக்களின் தரவரிசை: முஸ்லிம் எம்.பிக்களில் முதலிடம் முஜிபுர் ரஹ்மான்; இரண்டாமிடம் நிசாம் காரியப்பர்; மூன்றாமிடம் ரவூப் ஹக்கீம்.!
(அஸ்லம் எஸ்.மெளலானா)
பாராளுமன்ற நடவடிக்கைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்றிறன் மற்றும் இயலுமை சம்பந்தமான manthri.lk தரப்படுத்தலில் முஜிபுர் ரஹ்மான் எம்.பி முதலாம் இடத்தையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் எம்.பி, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 17வது இடத்தை பெற்றுக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் இம்முறையும் முஸ்லிம் எம்.பிக்களுள் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அதேவேளை 19 ஆவது இடத்தை பெற்றுக் கொண்ட நிசாம் காரியப்பர் எம்.பி, முஸ்லிம் எம்.பிக்களுள் இம்முறை இரண்டாம் இடத்தை பெற்றிருக்கிறார். கடந்த முறை இவர் மூன்றாமிடத்தை பெற்றிருந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி, 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 22 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார். கடந்த முறை இவர் இரண்டாமிடத்தை பெற்றிருந்தார்.
manthri.lk தற்போது வெளியிட்டுள்ள தர வரிசைப் பட்டியலானது கடந்த ஜூன் மாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்திய செயற்றிறனை அடிப்படையாகக் கொண்ட தரவரிசைப்படுத்தல் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments