புத்தளம் - உடப்பு கிராம கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
(உடப்பு செய்தியாளர்-க.மகாதேவன்)
புத்தளம் - உடப்பு கிராம கடற்பரப்பில் இன்று (14) காலை வேளையில் இறந்த நிலையில் சுமார் 45கிலோ மதிக்கத்தக்கதான கடலாமை ஒன்று கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டது.
இது சேதம் இல்லாத நிலையில் காணக்கூடியதாக இருந்தது. இந்த அரியவகை கடலாமைகள் அடிக்கடி இந்தப்பகுதியில் கரையொதுங்குகின்றன. இவை கரையொதுங்கக் காரணம் பற்றி, மீனவர்களிடம் வினவியபோது, பெரிய இயந்திரப்படகுகளில் வலிச்சல் வலைக்குச்செல்லும் மீனவர்கள் இது வலையில் பட்டவுடன் அப்படியே வெட்டிவிடுவதன் காரணமாகவே கரையொதுங்குகின்றன எனவும் குறிப்பிட்டனர்.
No comments