Breaking News

"என்னை செதுக்கிய மீஸானிய்யா" – நூல் வெளியீடு.

முஹம்மட்  இல்ஹாம்

நாட்டின் தலைசிறந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான அக்குறணை மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் பழைய மாணவரும், இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரியும், மதீனா இஸ்லாமிய சர்வதேச பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடரும் அஷ்-ஷைய்க் அல் ஹாபிழ் A.G.M. வசீம் (மீஸானி) எழுதிய "என்னை செதுக்கிய மீஸானிய்யா" எனும் நூல் வெளியீட்டு விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை அக்குறணை மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது.


மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் நிர்வாகத் தலைவர் அல் ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் அவர்கள் தலைமை தாங்கும் இந்நிகழ்வில், பல்வேறு துறைகளின் சிறப்புப் பெருமக்கள் கலந்துகொள்ள உள்ளனர்.


எழுத்தாளரின் கல்விப் பயணத்தையும், மீஸானிய்யா அரபுக் கல்லூரி அவருடைய வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களையும் மையமாகக் கொண்டுள்ள இந்நூலை, அல் இத்கான் – ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்புக்கான மத்திய நிலையம் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.







No comments