Breaking News

மாணவர் தலைவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வு.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் மாணவர் தலைவர்களுக்கான சான்றிதழ் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் (15) பாடசாலையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.


2024 ஆம் ஆண்டு பாடசாலையில் மாணவர் தலைவர்களாக தமது அளப்பரிய சேவைகளை வழங்கிய 39 மாணவர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.


இதே வேளை பாடசாலையிலே 2024 ஆம் ஆண்டு வாத்திய இசைக் குழுவில் கடமையாற்றி ஆறாம் தரத்துக்கு சென்ற 11 மாணவர்கள் இதன்போது அவர்கள் செய்த சேவைக்காக வேண்டி  சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


பாடசாலை அதிபர் எச்.யூ.எம்.எஹியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக புத்தளம் வடக்கு கோட்டக்கல்விப்பணிப்பாளரின் பிரதிநிதிகளாக சித்திரப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகரும், தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் அழகியற்கல்வி பாட விரிவுரையாளருமான கலாநிதி எம்.எம்.முஹம்மது, கணிதப்பாடத்துக்கான ஆசிரிய ஆலோசகர் திரு.பிரதாபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


கௌரவ அதிதியாக புத்தளம் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி திரு. உபுல்

கலந்து கொண்டார்.


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம், புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் சரீனா பர்வீன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம்.ஜே.எம்.நளீம் உள்ளிட்ட உறுப்பினர்கள், பாடசாலையின் வீதி பாதுகாப்பு குழுவினர் மற்றும் பெற்றார்களும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.


மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இந்நிகழ்வின் போது மேடையற்றப்பட்டன.


இவ்விழாவின் சகல விடயங்களையும் உதவி அதிபர் எஸ்.ஐ.எல்.முஸம்மில், சிரேஷ்ட ஆசிரியரும், பகுதித்தலைவருமான எம்.எச்.எம்.மில்ஹான் ஆகியோர் ஒருங்கிணைப்புச் செய்திருந்தனர்.



















No comments