Breaking News

காசா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழுவிடம் வலியுறுத்தினார் நிசாம் காரியப்பர்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

காசா போர் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் தூதுக்குழுவிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வலியுறுத்தியுள்ளார்.


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க காங்கிரஸ் விஷேட தூதுக்குழு (U.S. Congressional Staff Delegation from the House Democracy Partnership), பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோரை இன்று சந்தித்துள்ளது.


இந்தச் சந்திப்பில் தமிழ் பேசும் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்தும் ஆழமாக கலந்துரையாடப்பட்டது.


அத்துடன் மாகாண சபைத் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தப்பட்டது.


இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்கள்; காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி, அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுத்து உடனடியாக இந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.


குழு உறுப்பினர்கள் இதை ஏற்றுக் கொண்டு, அமெரிக்காவும் அதன் தலைவரும் யுத்தத்தை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்றுக் கொண்டனர்.




No comments