நாளை இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்கின்ற ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவா? ஆதரவுக்கும், ஏற்பாட்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
நாளை இலங்கை தமிழரசு கட்சி ஏற்பாடு செய்கின்ற ஹர்த்தாலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது யாவரும் அறிந்தது.
ஆனால் எந்தவொரு முஸ்லிம் பிரதேசங்களிலும் உள்ள வர்தகர்களையோ, வர்த்தக சங்கத்தையோ அல்லது பெரிய பள்ளிவாசல்களையோ முஸ்லிம் காங்கிரஸ் சந்தித்ததாகவோ, ஹர்த்தால் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியதாகவோ தகவல் எதுவும் இல்லை.
ஒரு சிறுபான்மை கட்சி என்ற ரீதியில் இன்னுமொரு சிறுபான்மை கட்சியான இலங்கை தமிழரசு கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. அவ்வளவுதான்.
இதன் உண்மையை புரிந்துகொள்ளாத சிலர் சமூக வலைத்தளங்களில் என்னவெல்லாம் கற்பனயில் துடிக்கின்றனர்.
அவ்வாறு முஸ்லிம் பிரதேசங்களில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு கோருவதென்றால், வடக்கு கிழக்கு மாகாணங்களின் ஒவ்வொரு ஊரிலும் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுக்கள் மற்றும் மாவட்ட குழுக்களை அழைத்து இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பணிக்கப்பட்டிருக்கும்.
ஆனால் அவ்வாறு எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லாத நிலையில், எடுத்த எடுப்பில் வசைபாடுவதானது “ஆதரவு” என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியாமையாகும். இவ்வாறானவர்கள்தான் முஸ்லிம் காங்கிரசை விமர்சித்து சமூக ஆலோசனை வழங்குகின்றனர்.
No comments