Breaking News

டாக்டர் ஷாபியும் கிழக்கு மக்களும் நூல் அறிமுகமும்

பாறுக் ஷிஹான்

டாக்டர் ஷாபியும் கிழக்கு மக்களும் நேரடி வாக்குமூலமும் டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் அறிமுக நிகழ்வும்  ஞாயிற்றுக்கிழமை (27) சாய்ந்தமருது லீ மெரிடியன் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.


இலங்கை நீதிக்கான மய்யத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டமுதுமானி ஷஃபி எச்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு குருநாகல் போதனா வைத்திய சாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், கலாநிதி மெளலவி எம்.முபாரக் மதனி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஏ.எம். றஸ்மி, இலங்கை நீதிக்கான மய்யத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், நூலாசிரியர் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் உள்ளிட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் குடும்பத்தினர், புத்திஜீவிகள், கல்விமான்கள், உலமாக்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நிகழ்வில் சிறப்புரையினை கலாநிதி மெளலவி எம்.முபாரக் மதனி நிகழ்த்தினார்.


மேலும் நிகழ்வில் தான் பாதிக்க்ப்பட்ட நிலையில் தனக்கு அடைக்கலம் கொடுத்த கிழக்கு மக்களை நினைவு கூர்ந்து வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் விஷேட உரை நிகழ்த்தினார்.


இதன்போது  ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் தொடர்பில் குறுந்திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.


டாக்டர் ஷாபியின் அநீதிக்கு எதிரான போராட்டம் நூல் அறிமுகத்தினை நூலாசிரியர் எழுத்தாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் நிகழ்த்தியதோடு நூல் விநியோகிக்கப்பட்டது.

























No comments