Breaking News

இருதய சத்திர சிகிச்சைக்காக நிதி உதவி கோரல்

முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விருதோடை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த சேனைக்குடியிருப்பு மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப்பள்ளிக்கு கட்டுபட்டு வாழ்ந்து வரும் 42 வயதுடைய பாருக் இனாமுல் ஹஸன் அடையாள அட்டை இலக்கம்: 831533900V - என்பவர் தினசரி கூலி வேலை செய்யும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 


கடந்த 02 மாதங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த இவர் தற்போது இருதய அடைப்பு ஏற்பட்ட நிலையில் விரைவில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்திய இருதய சத்திரசிகிச்சை நிபுணர் Dr. P. லக்ஸ்மன் அறிவித்துள்ளார். 


எனவே இவருடைய சத்திர சிகிச்சைக்காக சுமார் இருபது இலட்சம் ரூபாய்கள் (2,000,000) தேவைப்படுகிறது.


சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவரால் இத்தொகையினை நிவர்த்தி செய்ய முடியாது உள்ளது. எனவே தங்களுக்கு இயலுமான தொகையினை வழங்குமாறு நிர்வாகம் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.


நீங்கள் மனமுவந்து வழங்கிய உதவிக்கு எல்லாம் வள்ள இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நல்லருள் புரிவானாக.


அல்லாஹுத்தஆலா நம்மையும் அச்சகோதரனையும்  நாம் பயப்படக் கூடிய தீய நோய் நொடிகளில் இருந்தும், எல்லா விதமான கஷ்டங்களில் இருந்தும், பிரச்சினைகளில் இருந்தும் எம்மை பாதுகாப்பானாக!.


நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்: “ஓர் அடியான் தன் சகோதரருக்கு உதவும் காலமெல்லாம் இறைவனும் அந்த அடியானுக்கு உதவிக்கொண்டே இருப்பான்”. (நூல்: முஸ்லிம்)


வங்கி கணக்கு விபரம்:

F.I. Hassan

81347247

Bank of Ceylon 

Madurankuli Branch


தொடர்பு இலக்கம் :-

076-7275713

உங்கள் சிறு உதவியும், ஒரு உயிரை காப்பாற்றும் ♥️






No comments