Breaking News

கற்பிட்டி ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி!

முஹம்மட் இல்ஹாம்

கற்பிட்டி - ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  கல்பிட்டி தொடக்கம் நுரைச்சோலை வரையுள்ள உலமாக்கள் ஒன்றியங்களுக்கான சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்று கடந்த சனிக்கிழமை (26) ஆலங்கடா மெல்போன் மைதானத்தில் இடம்பெற்றது.


குறித்த இப் போட்டியில் ஆறு அணிகள் கலந்து கொண்டன.


•கல்பிட்டி மஜ்லிஸுல் உலமா A,B

•முதலைப்பாளி நஐ்வதுல் உலமா.

•திகழி ஹையதுல் உலமா

•ஆலங்குடா இத்திஹாதுல் உலமா A,B (organising team)


மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்ற இப்போட்டியில் கல்பிட்டி மஜ்லிஸுல் உலமா A,B  மற்றும் திகழி ஹையதுல் உலமா, ஆலங்குடா இத்திஹாதுல் உலமா A, B ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.


இதில் கல்பிட்டி மஜ்லிஸுல் உலமாB அணியும், திகழி ஹையதுல் உலமா அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி இரண்டு அணிகளும் மோதின 


இறுதியில் கல்பிட்டி மஜ்லிஸுல் உலமாB அணியை வீழ்த்தி திகழி  ஹையதுல் உலமா அணிவெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.


இத்தொடரில் ஆட்ட நாயகனாக  ஆஷிக் மௌலவி, தொடரின் நாயகனாக சரீப் மௌலவி ஆகிய இருவரும் பெற்றுக்கொண்டனர்.


வெற்றி பெற்ற அணிகளுக்கான கிண்ணங்களை இப்போட்டியினை  ஏற்பாடு செய்த ஆலங்குடா உலமாக்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments