கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிக்கு தெரிவு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவி டீ.எப்.இன்ஷிரா அண்மையில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் கலந்து கொண்டு, வடமேல் மாகாணத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்றின் முதற் சாதனை இதுவாகும் என அதிபர் கே.எம்.நயீமுல்லா தெரிவித்தார்.
மாணவியின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த பாடசாலை அதிபர் கே.எம்.நயீமுல்லா,பிரதி அதிபர் ஏ.சீ.எஸ்.பர்ஸீன், மாணவிக்கு பயிற்றுவித்த ஆசிரியை எச்.ஆர். பாத்திமா ஹஸ்ஸானா மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை முகாமைத்துவ குழுவினரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரும், பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினரும், பெற்றோர்களும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
No comments