Breaking News

தேசிய மக்கள் சக்தியின் "பாதுகாப்பான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை" புத்தளத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எம்.யூ.எம்.சனூன்

தேசிய மக்கள் சக்தியினால் "பாதுகாப்பான மற்றும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை" எனும்  மக்களுக்கு வழங்கும் தேசிய வேலை திட்டம் நாடெங்கும் ஆரம்பமாகியுள்ளது.


இத்திட்டத்தின் கீழ் பொதுப் போக்குவரத்து வாகனங்ளில் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை, கருத்துகளை தெரிவிக்கும் முறைப்பாடு இலக்கங்களை பார்வைக்கு வைக்கும் நடைமுறையும் ஆரம்பமாகியுள்ளது. 


புத்தளம் நகரில் இத்திட்டத்தினை புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் புத்தளம் பஸ் தரிப்பிடத்தில் அண்மையில் ஆரம்பித்து வைத்ததோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, கருத்துகளை தெரிவிக்கும் தொடர்பு இலக்கங்கள் மாநகர சபை முதல்வரால் காட்சி படுத்தப்பட்டது.








No comments