புத்தளம் மணல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்.
எம்.யூ.எம். சனூன்
அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் புத்தளம் மணல்தீவு ரோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இவ்வேலைத் திட்டமானது ஆரம்பத்தில் பெற்றோர் ஆசிரியர் விழிப்புணர்வு செயற்பாட்டின் மூலம் அதிபர் ப.ஜெனற்ராஜினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டெங்கு ஒழிப்பு, வகுப்பறை சுத்தம், மலசல கூட சுத்தம், பாடசாலையின் வெளிப்புறச் சுத்தம், வகுப்பறையின் கூரை சுத்தம், ஆசிரியர் ஓய்வறை சுத்தம், விஞ்ஞான ஆய்வு கூட சுத்தம், சமய ஆராதனை வகுப்பறை சுத்தம் போன்றன ஆசிரியர்களினாலும் பெற்றோர்களினாலும் மாணவர்களினாலும் மேற்கொள்ளப்பட்டன.
அதுமட்டுமின்றி அதிபர், ஆசிரியர், பெற்றோர்களினால் பாடசாலை வளாகத்தில் பயன் தரும் மரங்களும் நடப்பட்டன.
இறுதி நிகழ்வாக மாணவர்களுக்கான சூழல் நட்பு தியானப் பயிற்சியும் அருட்சகோதரி எஸ். கொன்ஸ்டன்டைன் மேரியினால் வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு உதவி செய்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை அதிபர் ப. ஜெனற்ராஜ் தெரிவித்துள்ளார்.
No comments