Breaking News

புத்தளம் - கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வரலாற்று சாதனை!.

எம்.யூ.எம். சனூன்

மதுரங்குளி கனமூலை பாடசாலையின் 70 வருட வரலாற்றிலே முதல் முறையாக க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் மாணவர் ஒருவர் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக  அதிபர் பீ.எம்.முஸ்னி தெரிவித்துள்ளார்.


எம்.எப்.பர்விஸ் அக்தார் என்ற மாணவரே 09 ஏ சித்திகளை பெற்று பாடசாலை மற்றும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். 


இவர் எஸ்.ஐ.எம்.பஸ்மின் மற்றும் எம்.எஸ்.எப்.பர்ஸானா ஆசிரியை தம்பதிகளின் புதல்வர் ஆவார்.


இச்சாதனையை பெற இவருக்கு உதவிய அதிபர், பிரதி அதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பாடசாலை நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.  


இதே வேளை இத்தகைய சிறந்த பெறுபேற்றை பெற்றதை கேள்வியுற்ற கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம்.பைசர் மரிக்கார் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருடன் பாடசாலைக்கு விஜயம் செய்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.






No comments