Breaking News

மணல்குன்று பாடசாலையில் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம்.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் மணல்குன்று பாடசாலையில் அரசின் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.


இந்த தேசிய வேலைத்திட்டத்திற்கு இணங்க,  'சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்' என்ற தொனிப்பொருளில் மேற்படி வேலைத்திட்டம் அதிபர் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என அணைவரும் ஒன்றிணைந்து பாடசாலை வளாகம் முழுவதும் தூய்மை மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டனர்.


இந்தத் திட்டம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் அவசியத்தை உணர்த்துவதோடு, பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது.


உறுதியான ஒத்துழைப்பும், செயல்திறனும் பணிகளை நிறைவுசெய்ய உதவி புரிந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை அதிபர் தெரிவித்துள்ளார்.





















No comments