அக்கரைப்பற்றில் முன்னெடுக்கப்பட்ட Beach Cleaning
அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை பிரதேசங்கள் நேற்று புதன்கிழமை (09) விஷேடமாக சுத்தம் செய்யப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஐயந்தலால் ரத்னசேகர அவர்களின் ஆலோசனையின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் இஸட்.ஏ.எம். பைசால் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் தலைமையில் இவ்வேலைத் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுமார் 2.5 கிலோ மீட்டர் அளவிலான கடற்கரைப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான சிரமதானப் பணிகளில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் உட்பட உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடற்கரைப் பிரதேசங்களை பேணிப் பாதுகாப்பது தொடர்பிலான விழிப்புனர்வுக் கலந்துரையாடல் ஒன்று அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இடம்பெற்றது.
இதில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் உட்பட உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
-அஸ்லம் எஸ்.மெளலானா
No comments