கவியருவி ஷிஹானா நௌபர் எழுதிய "சிறகின் மொழி" நூல் வெளியீட்டு விழா.
எம்.யூ.எம். சனூன்
ஒரு பெண்ணின் கனவுகள் சிறகடிக்கும் ஒலியாக திகழும், கவியருவி ஷிஹானா நௌபர் எழுதிய "சிறகின் மொழி" நூல் வெளியீட்டு விழாவானது கண்டி பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அண்மையில் (06) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியின் முதல்வர் எஸ்.எம்.எஸ். பரீனா தலைமை தாங்கினார்.
நிகழ்வின் பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் பஸீஹா அஸ்மி, கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட பத்திரிகையாளர், முன்னாள் தினகரன் வாரமஞ்சரி கவிதைப்பூங்கா பொறுப்பாசிரியர் கவிஞர் ரஷீட் எம்.ரியால், முன்னாள் பதியுத்தீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியின் உயர்தரப் பிரிவின் உதவி அதிபர், தமிழ் ஆசிரியர், எழுத்தாளர், அறிவிப்பாளர், கவிஞர் கலாபூஷணம் அரபா மன்சூர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக சமாதான நீதவான், ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், Universal Business System இன் பணிப்பாளர், தமிழ் மன்ற பணிப்பாளர், தேசமான்ய பௌமி ஹலீம்தீன் மக்கள் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர், ஊடகவியலாளர், எழுத்தாளர் இராமன், கண்டி வலயக் கல்விப் பணிமனையின் பிரதிப்பணிப்பாளர் ஏ.ஆர்.எப். அமீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்கை தமிழ் ஊடகத்தின் உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் நோபல் மிஷன் குழுமத்தின் அங்கத்தவர்கள். ஈஷா டெக்ஸ்ட் உரிமையாளர் திருமதி நலூர், நூராஸ் ஸ்விங் ஆர்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி நூர்ஜஹான், பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.எப்.எம்.முபாஸ் ஆகியோருடன் ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
நூல் விமர்சனம் எழுத்தாளர் அஸ்மாதீன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. நூலின் முதல் பிரதியை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் பஸீஹா அஸ்மி பெற்றுக் கொண்டார்.
நூலாசிரியரின் அறிமுகம் பிரபல கவிஞர் ரஷீத் எம். ரியால் அவர்களால் நிகழ்த்தப்பட்டது
நூலாசிரியர் ஷிஹானா நௌபர் இதன் போது வருகை தந்திருந்த அதிதிகளுக்கும் நூலின் முதல் பிரதிகளை வழங்கி வைத்தார்.
No comments