Breaking News

புத்தளம் - சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் Clean Steps - Safe Space செயற்திட்டம்

பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம். எம். எம். மிஹ்லார் (நளீமி), உப அதிபர் எஸ். எல். எம். ஜெனீஸ் ஆகியோர் தலைமையில் clean steps - Safe Space செயற்றிட்டம் இன்று (09) மிக சிறப்பாக பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.


இதன் போது பாடசாலையின் அதிபரால்  அரசாங்கத்தின் இச்  செயற்றிட்டம் தொடர்பாக  தெளிவு படுத்தும் வகையில் சிறப்புரை ஒன்றும் இடம் பெற்றது. 


மேலும் பாதுகாப்பான பாடசாலை சூழலை நிர்மாணிக்கும் இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள்,நலன்விரும்பிகள் மற்றும்  மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும்  கலந்து கொண்டனர்.


"Clean srilanka" திட்டத்தின் ஒரு பகுதியான இச் செயற்றிட்டம் 2025.07.09 அன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் காலை 8.00 am தொடக்கம் 1.00 pm வரை இடம்பெறுகிறது.


 இந்த செயற்றிட்டத்தின் நோக்கம், பாடசாலைகளைச் சுத்தமாக வைத்திருப்பதோடு, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதாகும். குறிப்பாக, மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கவும் இது உதவுகிறது.











No comments