Breaking News

அநுராதபுரத்தில் கடற்படையின் 1113 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களிடம் கையளிப்பு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 1113 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் அநுராதபுரம் மாவட்டத்தில் மிஹிந்தலை பிரதேச செயலக பிரிவில் நுவரவெவ ஸ்ரீ சந்தர்மவன்ச விவேகாஸ்ராம விகாரையின் வளாகத்தில் நோயற்ற வாழ்வு ஆரோக்கியமான மக்கள் என்ற தொலை நோக்கு பார்வையை அடைவதற்காக கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன் சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (07) பொது மக்களிடம் கையளிக்கப்பட்டது.


இவ்வாறு நிர்மாணிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மீள் சுத்திகரிப்பு நிலையமும் ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் லீட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.







No comments